Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 23, 2012

ஹஜ்:சவூதி ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி!

இவ்வாண்டு புனித ஹஜ் பயணத்திற்கான சர்வீஸ்களை நடத்த சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஹஜ் பயண சர்வீஸ் நடத்துவதில் இருந்து ஏர் இந்தியா முற்றிலும் வாபஸ் பெற்றுள்ளது. மேலும் கடந்த ஹஜ் சர்வீஸ் நடத்திய நாஸ் ஏர் நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் இதுத்தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. சவூதி அரேபியாவும், இந்தியாவும் பல ஆண்டுகளாக சமமான அளவில் ஹஜ் சர்வீஸ்களை நடத்தி வருகின்றன. ஏர் இந்தியாவும், சவூதி ஏர்லைன்சும் விமான சேவைகளை கவனித்துக் கொண்டன. ஆனால், இவ்வாண்டு ஏர் இந்தியா பூரணமாக விமான போக்குவரத்து சேவை மற்றும் க்ரவுண்ட் ஹேண்ட்லிங் பணிகள் ஆகியவற்றில் இருந்து விலகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹஜ் சர்வீஸிற்கு அனுமதி வழங்கப்பட்ட சவூதி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான நாஸ் ஏர், இவ்வாண்டிற்கான பயணத்திற்கான விலைப்புள்ளி
அதிகம் அளித்ததால் அந்நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 விமானக் கட்டணத்தை பிற விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான விலைப்புள்ளி அளித்த ஜெட் ஏர்வேஸிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 30 சதவீத ஹஜ் விமான சர்வீஸ்களை ஜெட் ஏர்வேஸும், மீதமுள்ளவற்றை சவூதி ஏர்லைன்சும் நடத்தும்.
thanks:thoothuonline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...