Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 24, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விபரம்

 கடலூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 0.39 சதவீதம் குறைந்துள்ளது.
 கடலூர் வருவாய் மாவட்டத்தில் 77 மையங்களில் 26,709 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 21,700 பேர் தேர்ச்சி பெற்றனர். 5009 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 81.25 ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.39 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.


விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 7,769 பேர் தேர்வு எழுதியதில், 5,975 பேர் தேர்ச்சி பெற்றனர். 1,794 பேர் தோல்வி அடைந்தனர். தேர்ச்சி 76.91 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 2.49 சதவீதம் குறைவு.

மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது:


விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி,
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
 பெற்றுள்ளன.

 கடலூர் கல்வி மாவட்டத்தில் 
சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
 கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ், 
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
, நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
 தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்
 பள்ளி, மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
 சிதம்பரம் காமராஜ்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும்,


 40 சதவீதத்துக்கும் குறைவாகத் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்:
 ÷கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள்.
நன்றி:தினமணி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...