Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 18, 2012

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது .கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது: கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது.

23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பம்பை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதேபோல் மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில கிராம கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. பீச்வாலிபால், கபடி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி மற்றும் பொழுதுப்போக்கு சாதனங்களும் இடம்பெறும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் பார்வையாளர்களுக்கான போட்டிகளும், அதற்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.  விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் நேர்முக
உதவியாளர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...