Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 26, 2012

பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல், சமையல் எரிவாயு விலையும் உயர்கிறது?

     புதுடில்லி : பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தததில் இருந்து தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்த்தியுள்ளது. நாடு முழுவதும் இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் நாடுகள் பல்வேறு கட்சியினர் சார்பிலும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ள நிலையில் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசகருமான ரங்கராஜன் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை உயர்வுக்கு பின்னர் இந்திய பொருளாதாரத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பெட்ரோலை போல டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்தினால் பொருளாதாரத்தில், அந்நிய முதலீட்டிலும் இன்னும் முன்னேற்றம் காணலாம்.

 இதனால் பணவீக்கத்தில் சிறு சுணக்கம் காணப்பட்டாலும், அந்நிய முதலீட்டிற்கு நல்ல வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ரங்கராஜனின் இந்த அறிவிப்பால் மத்திய அரசு, டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...