Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 26, 2012

எகிப்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் ஒத்திவைப்பு

எகிப்து நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டை கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர்ந்து போராடியதால், கடந்தாண்டு அவர் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து அங்கு கடந்த 24ஆம் மற்றும் 25ஆம் தேதி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. ஜனாதிபதி தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் நியாயமாக நடப்பதை பார்வையிட 350 நீதிபதிகளும், 1,500 பார்வையாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்கள் மட்டுமல்லாது 53 மனித உரிமை அமைப்புகள் சார்பில், 9,457 பார்வையாளர்கள் தேர்தலை கண்காணித்தனர். 

தேர்தல் பிரசாரம், வாக்குப் பதிவு, வாக்குகள் எண்ணிக்கை ஆகியவற்றை 14 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும், வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அறிவித்துள்ளது. இந்த கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கெய்ரோ நகர சாலைகளில் கோஷமிட்டும், கொடிகளை அசைத்த படியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கட்சியின் சார்பில் முகமது முர்சி என்பவர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது முர்சிக்கு 26 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. முன்னாள் பிரதமரான அகமது ஷபிக் 24 சதவீத
வாக்குகளை பெற்றுள்ளார்.

எனவே, அடுத்த வாரம் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. எனவே இந்த தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அடுத்த மாதம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் மறுதேர்தல் நடத்தப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...