Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 25, 2011

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது

ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக தன்னை இணைத்துக் கொள்ளவும் தீமானிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் மௌலானா சையது ரபே ஹுஸ்னி தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் அலஹாபாத் நீதிமன்ற பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு மற்றும் இடிப்பு வழக்கு, லிபரான் குழுவின் அறிக்கை, கல்வி உரிமை மற்றும் ஷரியத் சட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

வழகறிஞர் ஜாபரியப் ஜீலானி செயற்குழு முன் பாப்ரி மஸ்ஜித் வழக்கு சம்பந்தமான விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.பாப்ரி மஸ்ஜித் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பால் தாக்கரே,அத்வானி இருவரும் வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விருவர் மீது கிரிமினல் வழக்கு தொடராமல் கடந்த மே 2001 ஆம் சிபிஐ கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் பாப்ரி மஸ்ஜித் குறித்த லிபரான் குழுவின் பரிந்துரைபடி செயல் படாதது குறித்து வருத்தம் தெரிவித்தது.மேலும் கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் மற்றும் மத சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் அது இந்திய அரசியல் சட்டபிரிவு 25 மற்றும் 26 ஆகியவைகளுக்கு எதிரானவை எனவும் தெரிவித்தது.

இந்திய ஊடங்கங்கள் முஸ்லிம்களின் ஷரியத் சட்டங்களை திரித்து கூறுவதால் இஸ்லாத்தை பற்றி மக்களிடம் தவறான பார்வை நிலவுவதாகவும் அதனால் முஸ்லிம் சட்ட வாரியம் ஷரியத் சட்டங்களை பற்றிய விளக்கங்களை பிரசுரித்து முஸ்லிம் அல்லாத வழகறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுநல வாதிகளுக்கு விநியகம் செய்ய உள்ளதாக தெரிவித்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...