Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 25, 2011

இனப்படுகொலை:மோடியின் பங்கினை வெளிப்படுத்திய சஞ்சீவ் பட் உயிருக்கு அச்சுறுத்தல்

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் பங்கினை வெளிப்படுத்திய மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


போதுமான பாதுகாப்பை வழங்கவேண்டுமென 3 தடவை கோரிக்கை விடுத்த பிறகும் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு அவரை அலைக்கழிக்கிறது குஜராத் அரசு.

உள்துறை பொறுப்பை வகிக்கும் குஜராத் கூடுதல் முதன்மை செயலாளர் பல்வந்த்சிங்கிற்கு பிப்ரவரி 14, மார்ச் ஐந்து, ஏப்ரல் 13 ஆகிய தேதிகளில் கடிதங்களை அளித்துள்ளார் பட். ஆனால், ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியின் முதல்வரான சஞ்சீவ் பட்டிற்கு வழங்கப்பட்ட வாகனத்தை திரும்ப பெற்றுக்கொண்டது குஜராத்தின் மோடி அரசு.

மாநில உளவுத்துறையும், அஹ்மதாபாத் நகர போலீசும் பட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘ஒய்(y)’ பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டுமென அறிக்கை அளித்திருந்தது.

ஹிந்துத்துவா வாதிகளின் மிரட்டலின் காரணமாக 11 நபர்கள் கொண்ட ஆயுத படை பாதுகாப்பு அளிக்கவேண்டுமென அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதனை அரசு பரிசிலீக்கவில்லை.

குஜராத்தில் முஸ்லிம் இனப் படுகொலை நடந்தேறிய பொழுது மாநில உளவுத்துறையில் டி.சி.பி பதவி வகித்த சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள பிரமாணப்பத்திரத்தில் மோடியின் பங்கினை வெளிச்சம்போட்டு காட்டியிருந்தார்.

கலவரத்தில் முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும், ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த அதிகாரிகள் வழிகோலவேண்டுமென 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மோடி உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்பு புலனாய்வுக்குழு உண்மையை மறைப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...