கோடை காலம் துவங்கிய நிலையில், உச்சபட்ச மின் நுகர்வு, 11 ஆயிரத்து 200 மெகாவாட் வரை உயர்ந்துள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்தில் தினமும், 5 முதல் ஒன்பது மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத வாரியம், சென்னையில் தினமும் ஒரு மணி நேர மின் தடையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதிகரித்துள்ள மின் தடை நேரத்தால், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளன. ஏற்றுமதி தொழில் உள்ளிட்டவைகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பண புழக்கம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள் மூலம், 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மின் உற்பத்தியை விட நுகர்வு அதிகரித்ததால், 2008 செப்., 1ம் தேதி முதல் தமிழகத்தில், இரண்டு மணி நேர மின் தடை அமலுக்கு வந்தது. கோடை துவங்கிய நிலையில் ப்ரிட்ஜ், "ஏசி' உபயோகம் அதிகரிப்புக்கு ஏற்ப தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவையும், 11 ஆயிரத்து 200 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. "கோடை கால மின் தேவை சமாளிக்கப்படும்' என, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமி தெரிவித்திருந்தார். ஆனால், புதிய அனல்மின் நிலையங்கள் ஒன்று கூட இன்னமும் மின் உற்பத்தியை துவங்கவில்லை. பற்றாக்குறை சமாளிக்க ஒரு வாரத்துக்கு முன் வெளிமாநிலங்களில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு, 10 முதல் 14 ரூபாய் கொடுத்து பீக்-அவரில், 2,000 மெகாவாட் வரை வாரியம் மின் கொள்முதல் செய்தது. இருந்த போதிலும், 1,400 மெகாவாட் மின் பற்றாக்குறை தவிர்க்க முடியாததாகி விட்டது.
தமிழகத்தில் காற்றாலைகள் மூலம், 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மே மாதம் இறுதியில் தான் தென்மேற்கு பருவ காற்று துவங்கும் என்பதால், அப்போது தான் காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். தற்போது காற்றாலைகள் மூலம், 100 முதல், 300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைப்பதால், மின் பற்றாக்குறை சமாளிக்க முடியாமல் வாரியம் திணறுகிறது. தொழிற்சாலைகளுக்கு, 30 சதவீதம் மின் தடை செய்தது. விவசாயத்துக்கு பகலிலும், இரவிலும் தலா மூன்று மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வினியோகம் செய்கிறது. சென்னைக்கு ஒரு மணி நேரம் வினியோகம் செய்யும் மின்சாரத்தை, கோவை அல்லது ஈரோடு மண்டலம் முழுவதும், ஒரு மணி நேரம் வினியோகம் செய்ய முடியும். எனவே, சென்னையில் ஒரு மணி நேரமாவது மின் தடை செய்து, அதை மற்ற பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள், அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். அதனடிப்படையில் சென்னையில், தினமும் ஒரு மணி நேர மின் தடையும், தமிழகம் முழுவதும் மூன்று மணி நேர மின் தடையும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதுவரை சென்னை தவிர, மாநிலம் முழுவதும் அனுபவித்து வந்த மின் தடை கொடுமைøயை, தற்போது சென்னை மக்களும் அனுபவிக்க துவங்கியுள்ளனர்.
தேர்தல் முடிந்தவுடன் மின் தடை நேரம் மூன்று மணி நேரமாக அதிகரித்து, தமிழக அரசு உத்தரவிட்டது. சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட நேரம் தவிர, ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது. இதனால், அனைத்து தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குறித்த நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாததால், ஏற்றுமதி தொழில் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இப்பாதிப்புகள் குறித்தும், தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், ஒருங்கிணைந்த தொழிலதிபர்கள் ஆலோசனை கூட்டம், நாளை சேலத்தில் நடக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் கூட தொடர்ந்து தொழில் செய்ய முடியாத அளவுக்கு, மின்வெட்டு பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால், எந்த ஒரு தொழிலும் செய்ய முடியாமல், நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஏற்றுமதி தொழில் செய்வோர், உற்பத்தி செய்ய தாமதம் ஏற்படும் பட்சத்தில், சரக்குகளை சொந்த செலவில் விமானத்தில் அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இதனால், லாபம் கிடைக்காமல் போவது மட்டுமின்றி, நஷ்டத்தையும் சந்திக்க வேண்டியுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...