Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 29, 2011

பாடத்திட்டம் தரமானதாக இல்லை: சமச்சீர் கல்வி திட்டத்தை ஏற்க மாட்டோம்; தனியார் பள்ளி கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, ஏப்.29-


தமிழ்நாடு மெட்ரிக் குலேசன் மேல்நிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.கே.வெங்கடாசல பாண்டியன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமச்சீர் கல்விக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இருக்க கூடிய கல்வியின் தரத்தை குறைக்ககூடாது.சமச்சீர் கொள்கையின்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை.
இப்போது உள்ள பாடத்திட்டங்கள் 3 மாத காலத்திற்குள்ளே முடிந்து விடும் அளவிற்கு மிகவும் எளிமையாக இருக்கின்றன. இந்த புத்தகத்தை படித்து தேறிவரும் மாணவர்கள் தரமற்ற கல்வியால் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை வரும்.

தமிழக மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் இப்போது உருவாக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை ஏற்க மாட்டோம். வழக்கமாக நாங்கள் பாடப்புத்தக தேர்வை பிப்ரவரி மாதத்தில் முடித்து மே மாதத்தில் மாணவர்களிடம் வழங்கி விடுவோம். ஆனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்பாளர்கள் விவரமே எங்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...