Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 28, 2011

விலைவாசி உயர்வு; ஆசிய மக்கள் 6 கோடி பேர் பசி-பட்டினியால் தவிப்பார்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, ஏப். 28- : ஆசிய நாடுகளில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஆசிய நாடுகள் சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீண்டு வந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டின் பிற்பாதியிலிருந்து உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் கச்சா எண்ணை விலையும் வேகமாக உயர்ந்து கடந்த 31 மாதங்களுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
இதனால் பொருளாதார வளர்ச்சி தடைப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின், முதல் 2 மாதங்களில் உணவுப் பொருள் விலை சராசரியாக 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவும் 10 சதவீத விலைவாசி உயர்வு தொடர்ந்து நீடித்தால் மொத்தம் உள்ள 330 கோடி பேரில் 2 சதவீதம் பேர் அதாவது 6 கோடியே 40 லட்சம் பேர் வறுமையில் சிக்கி பசி - பட்டினிக்கு ஆளாவார்கள். இது தவிர பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...