Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 15, 2011

சீதனத்து சந்தையில் விலை போகாதே!

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கு திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன். (அல்குர்ஆன் 24:32) இந்த வசனத்தில் இறைவன் 'திருமணம் செய்து வையுங்கள்' என்ற ஏவலை பயன்படுத்தியுள்ளதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு பெற்றோர்களை சார்ந்தது என்பது விளங்குகிறது.


குழந்தைகளை நல்ல விதமாக வளர்ப்பதும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணைகளை அமைத்துக் கொடுப்பதும் நல்ல பெற்றோர்களின் அடையாளமாகும். திருமண வயதை அடைந்து விட்டப் பிறகும் ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டாம் என்ற வழிகாட்டலும் இங்கு கிடைத்துள்ளது. திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
 
மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும். (அபூஹூரைரா (ரலி), திர்மிதி) இந்த ஹதீஸை பெற்றோர்கள் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


பெரும்பாலான திருமணங்களில் மணமகனின் ஒழுக்கத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் குடும்ப உறவு - குடும்ப பாரம்பரியம் - சொத்து போன்ற இரண்டாம் பட்ச தகுதிகள் முன்னிலைப்படுத்தப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது.

 
மனிதா ஏன் நீயும் உன்
ஆண்மைக்கு விலை பேசுகிறாய்
ஒற்றைக் காலில் நிற்க இயலாத
உனக்கு எதற்கடா திருமணம்!

சீ! தனம் என்ற பெருங்கல்லை ஏன்?
அந்த அப்பாவி மாமா, மச்சான்...
என்ற பரம்பரையின் தலையில் போடுகிறாய்
சீதனம் எனும் பேரில் மார்க்கத்தை சீரழிக்காதே!


பாவம் அவர்கள் பாதம் தேயும் வரை
பாதையில் அழைந்து களைந்து விட்டார்கள்
உன்னைப் போல வீர ஆண்களுக்காக
வீடு, வாசல், வீதியில் செல்ல வாகனம்
என்றல்லவா நீ கேட்கின்றாய்!


கல் நெஞ்சம் கொண்ட கணவனா?
அல்லது காசு கேட்கும் கயவனா நீ?
உழைத்து வாழ முடியாத நீ எப்படி
உன் மனைவி மக்களுக்கு உழைத்துப் போடுவாய்

பெண் என்ற புதையல் வேண்டுமா
உனக்கு மஹர் என்ற மாணிக்கத்தைக் கொடு.
சீதனத்துக்கு அடிமையாகி விடாதே!
சீராய் சிந்தித்துப் பார்சோதனைக்குள்ளாகி விடாதே!

பணம் எனும் கூறிய ஆயுதத்தால் பிணமாகி விடாதே!
சிந்தித்துப் பார். வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்
பூமி அதிர்ந்து உன்னை உள் இழுத்தாலும்
மனிதா நிலையாய் நில்லடா

சீதனத்து சந்தையில் விலை போகாதே.
உன்னிடம் இருக்க வேண்டியது துணிவடா
மஹர் கொடுத்து மணப்பேன் மணப் பெண்ணை
மறை வழியில் நடத்துவேன் என் வாழ்வை
இன்ஷா அல்லாஹ்

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா?

அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

திருமணம் பணத்தினால் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் சீதனம் ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்.....

இப்படிக்கு,
சீதனம் வாங்காத மகளீர் சங்கம் (sifna)
source:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...