Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 16, 2011

ஏழைகளுக்கு உதவாத இந்திய பொருளாதார வளர்ச்சி!

ஒருபுறம் இந்திய பொருளாதாரம் செழித்து பொங்கி பிரவாகமாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதாக நமது பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்ற தலைவர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்க, மறுபுறம் அதே இந்தியாவின் பல மாநிலங்களில் போதுமான ஊட்டச்சத்து உணவின்றி பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா முழுவதுமே பல மாநிலங்களில் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டத்து இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற ஜனத்தொகை அதிகம் நிறைந்த மற்றும் ஏழைகள் அதிகம் நிறைந்த மாநிலங்களில் இந்த ஊட்டச்சத்தின்மை அதிகம் காணப்படுகிறது.

அதே சமயம் மணிப்பூர், மிஷோராம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே காணப்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

1990 களின் தொடக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கிய போதிலும், இந்திய குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவுக்கு இன்னமும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க,இப்பிரச்சனையை தீர்க்க இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியால் அதிகரிக்கும் தனது வருவாயை, உணவு கூப்பன்கள் வழங்குவது போன்ற உதவி திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்- க்காக இந்தியாவில் இந்த ஆய்வை மேற்கொண்ட சமூக, மனிதவளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறைக்கான உதவி பேராசிரியர் எஸ்.வி. சுப்பிரமணியம்!
Source

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...