குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் தீவிரமாக அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த அனைத்து குழந்தைகளும் தொடக்க பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகமும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாய கல்வியை வழங்க வேண்டும். அதற்கேற்றாற்போல அருகாமையில் பள்ளி இருப்பதை உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். நலிந்த பிரிவையும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவையும் சேர்ந்த குழந்தைகளுக்கு பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதையும் அவர்கள் எந்த காரணத்திற்காகவும் தங்கள் தொடக்க கல்வியை படித்து முடிப்பதிலிருந்து தடுக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகம் தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் வகுத்துரைக்கப்படும் வழிமுறைப் படி அந்த பகுதியில் வசிக்கும் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பற்றிய ஆவணங்களை பராமரிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து வருகை தந்து தொடக்க கல்வியை முடிப்பதை உறுதிப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி கட்டிடம், ஆசிரியர்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் உள்பட உள்கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும். இலவச கட்டாய கல்வி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வசதிகளை அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான தொடக்க கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இலவச கட்டாய கல்வி அளிக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வசதிகளை வழங்க வேண்டும். வேறு இடத்திலிருந்து மாறி வந்த குடும்பங்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தை அல்லது பொறுப்பில் உள்ள குழந்தை அருகாமையில் உள்ள பள்ளி ஒன்றில் தொடக்க கல்வி பெறுவதற்காக பள்ளியில் சேர்ப்பது அல்லது சேர்க்க வைப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் கடமையாகும்.
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தொடக்க கல்வி பெற தயார்படுத்துவதற்காகவும் 6 வயது நிறைவடையும் வரையில் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி முன்பருவக் கல்வி (கிண்டர் கார்டன்) மற்றும் பராமரிப்பு கிடைக்க செய்வதற்காகவும் உரிய அரசாங்கம் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பள்ளி முன்பருவ கல்வி வழங்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் சேர்க்கப்படும் எந்தவொரு குழந்தையும் தொடக்க கல்வி முடியும் வரையில் எந்தவொரு வகுப்பிலும் தொடர்ந்து நிறுத்தி வைத்தல் கூடாது. பள்ளியிலிருந்து வெளியேற்றப்படவும் கூடாது, இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...