Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 22, 2011

மக்களை திசை திருப்புகிறார் மன்மோகன்: அசாஞ்சே

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப்போட எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததை அம்பலப்படுத்தும் அமெரிக்க ஆவணங்கள் உண்மையானதுதானா என்று கூறி, மக்களை பிரதமர் மன்மோகன் சிங் தவறாக திசை திருப்ப முயற்சிப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள அவர், அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் அனைத்தும் வெறும் கருத்துக்களே என்று கூறுவது சரியானது அல்ல என்றும், அவ்வாறு கூறுவது உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் அமெரிக்க தூதரக அதிகாரிகளால் அவர்களது அதிகார திறனுக்கு ஏற்ப அனுப்பப்பட்டுள்ளன.அந்த ஆவணங்களில் அவர்கள் கூறியுள்ளது அனைத்தும் உண்மையானவையே.அதில் அவர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு வித்தியாசத்தையும் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான இந்திய ஆவணங்கள் விடயத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி தங்கள் நாட்டு தலைமைக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இருக்கிறது.

எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான அமெரிக்க ஆவணம் குறித்து மன்மோகன் அளித்துள்ள பதிலை பார்க்கும்போது அவர் மக்களை தவறாக திசை திருப்ப முயற்சிப்பதாகவே எனக்கு தோன்றுகிறது என்று அந்த பேட்டியில் அசாஞ்சே மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...