Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 23, 2011

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை

தொகுதி பெயர் : சிதம்பரம்
தொகுதி எண் : 158
அறிமுகம் : மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி சிறிய தொகுதியாக விளங்குகிறது.

தற்போதைய எம்.எல்.ஏ. : அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.)
தொகுதி மறுசீர‌மைப்பு : தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

எல்லை : தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.


தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நகராட்சி : சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்
பேரூராட்சிகள் : (1) கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் (2) பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள் (3) அண்ணாமலை நகர் பேரூராட்சி - 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள் : 69
மேல்புவனகிரி ஒன்றியம் (7) : சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.

குமராட்சி ஒன்றியம் (21) : அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.

வாக்காளர்கள் : ஆண் - 94,192, பெண் - 92,427 மொத்தம் - 1,86,619
வாக்குச்சாவடிகள் : மொத்தம் 215
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் : கோட்டாட்சியர் எம்.இந்துமதி : 94450 00425

இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 13 முறை
காங்கிர‌ஸ்: 5+2 முறை வெற்றி*
தி.மு.க.: 4 முறை வெற்றி
அ.தி.மு.க.: 3 முறை வெற்றி
த‌.மா.கா.: 1 முறை வெற்றி

*1952, 1957 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.

*1952ம் ஆண்டு தேர்தலில்தான் சிதம்பரம் தொகுதி உருவாக்கப்பட்டது.

*கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.

*சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் சிதம்பரம் ச‌ட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.

*சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.

*மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.

*தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் கே.எஸ். அழகிரி, 1991, 1996 சட்டசபைத் தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆனார்.

*அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து மோதும் மா.கம்யூனிஸ்ட்!

தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி மூ.மு.க.விற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்பாக ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இந்த தொகுதி மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்ட்டிருந்தது.இன்று மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், இதன் வேட்பாளாரக பாலகிருட்டிணன் வாண்டையாரை எதிர்த்து போட்டியிடகிறார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துடன் மா.கம்யூனிஸ்ட் மோதும் இச்சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடித்துள்ளது.
source:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...