Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 07, 2011

அசத்தியது இந்தியா:ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

 எதிரி ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

ஒரிசாவின் வீலர் தீவில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. துல்லியமான, விருப்பமான முடிவை எட்டும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்றது.

முதலில் மேம்படுத்தப்பட்ட பிருத்வி ஏவுகணை சண்டிப்பூர் கடற்கரைப் பகுதியில் இருந்து காலை 9.33 மணிக்கு நடமாடும் ஏவுவாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சண்டிப்பூரில் இருந்து 70 கிலோமீட்டருக்கு அப்பால் வீலர் தீவில் நிறுத்தப்பட்டிருந்த இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை, 4 நிமிடங்களில் கடற்கரைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ராடார்கள் மூலம் சிக்னலைப் பெற்று அந்த ஏவுகணையை விண்ணில் இடைமறித்து தாக்கி அழித்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...