Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 27, 2010

போலி என்கவுன்டர் வழக்கில் அப்ரூவர் ஆகிறார் போலீஸ் அதிகாரி

ஆமதாபாத் :குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி அமீன், அப்ரூவராக ஆகிறார். இதனால், குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் சொராபுதீன் என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ., இது போலி என்கவுன்டர் என புகார் கூறியுள்ளது. இந்த வழக்கில், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமீத் ஷா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள் ளார். இதனால், ஆத்திரம் அடைந்துள்ள பா.ஜ., மேலிடம், "சி.பி.ஐ., அமைப்பை, மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது' என, குற்றம் சாட்டியுள்ளது.இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலி என்கவுன்டர் வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் டி.எஸ்.பி., என்.கே.அமீன், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அமீன் உட்பட 15 போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அமீன் அப்ரூவராக மாறி சாட்சியம் அளிக்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவரது வக்கீல் ஜெகதீஷ் ரமணி தெரிவித்தார்.
நேற்று காலை சி.பி.ஐ., அலுவலகத்துக்கு சென்று, அதிகாரிகளிடம் பேசிவிட்டு வந்த ஜெகதீஷ், செய்தியாளர்களிடம் கூறுகை யில், "போலி என்கவுன்டர் வழக்கில் அமீன், அப்ரூவராக மாறி சாட்சியம் அளிக்கவுள்ளார். இதற்காக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அமீன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கும் படியும் மனுவில் கோரப்பட் டுள்ளது. அப்ரூவராக மாறுவதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்றார்.
போலி என்கவுன்டர் வழக்கில் ஏற்பட் டுள்ள இந்த திடீர் திருப்பம் காரணமாக, குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, குஜராத் மாநில முன்னாள் சி.ஐ.டி., அதிகாரிகள் ராய்கர், மாதூர் ஆகியோருக்கு சி.பி.ஐ., சார்பில் நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.இவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், மீண்டும் விசாரணைக்காக அவர்களை அழைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் அமீத் ஷாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி, சி.பி.ஐ., சார்பில் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமீத் ஷாவும், ஜாமீன் கோரி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.
காங்கிரசின் சதி: கட்காரி ஆவேசம் : குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா கைது குறித்து பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது:பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் நோக்கத்துடன் அமீத் ஷாவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் சுமத்தியுள்ளது. இதை சட்ட ரீதியாக சந்திப்போம். அதே நேரத்தில், காங்கிரஸ் சார்பில் எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தேர்தல் சவாலையும் சந்திப்போம். தேர்தலில் காங்கிரசை மக்கள் தூக்கி எறிவர். இந்த வழக்கில், காங்கிரஸ் உள்நோக்கத்துடன் செயல்படுவதை மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...