Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 25, 2010

தீவிரவாதம் மூலம் கேரளாவை முஸ்லிம் நாடாக்க முயற்சி; முதல்-மந்திரி பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம், ஜூலை 25-
கேரளாவில் சர்ச்சைக் குரிய கேள்வியை தயாரித்த பேராசிரியர் கையை ஒரு கும்பல் வெட்டியது. இது தொடர்பாக ஒரு அமைப்பை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான சி.டி. மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் பல்வேறு சதி திட்டங்கள் இருந்தன. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் வந்து குவிந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தன.

டெல்லியில் நடந்த முதல்-மந்திரி மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தனிடம் இந்த விஷயம் பற்றி நிருபர்கள் கேட்டனர். அப்போது அச்சுதா னந்தன் கூறியதாவது:-

ஒரு முஸ்லிம் அமைப்பினர் இளைஞர்களை தங்கள் பக்கம் கவர பணத்தை வாரி இறைக்கின்றனர். மற்ற மதத்தை சேர்ந்த இளைஞர்களை மத மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் திசை திருப்பவும் முயற்சிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அவர்களை ஆதரிக்க வில்லை.

20 ஆண்டுக்குள் கேரளாவில் முஸ்லிம்களை மெஜாரிட்டி ஆக்கி அதை முஸ்லிம் நாடாக்க முயற்சி நடக்கிறது.

இந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாம். இது போன்ற ஆபத்தான இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் ஆகஸ்டு 15-ந்தேதி நடத்த இருந்த மாநாட்டுக்கு தடை விதித்து இருக்கிறோம்.

தற்போது இந்த இயக்கம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை எதுவும் முஸ்லிம் சமூதாயத்தை பாதிக்காத வகையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள உள்துறை மந்திரி கோடியேரி பாலகிருஷ்ணன் கூறும் போது தடை செய்யப்பட்ட சிமி இயக்கம் தான் புதிய இயக்கமாக மாறி உருவெடுத்து இருக்கிறதா? என்பதை கண்டறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...