Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 28, 2010

கோயம்பேட்டில் கீழே பஸ் ஸ்டாண்ட் மேலே மெட்ரோ ரயில் ஸ்டேஷன்

வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கோயம்பேட்டில் உள்ள புறநகர் பஸ் நிலையத்தின் மாடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ளதுபோல் சென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தூண்கள் அமைக்கும் பணி சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டு பாதையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் பாதை, வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை செல்லும். இதில், வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையாக இருக்கும். சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை உயர்த்தப்பட்ட பாதையாக இருக்கும்.
அதன்படி, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் தரைக்கு அடியிலும், சின்னமலை, கிண்டி, ஆலந்தூர், ராணுவ அலுவலர் பயிற்சி மையம், மீனம்பாக்கம், சென்னை விமான நிலையத்தின் ரயில் நிலையங்கள் தரை பகுதிக்கு மேல் இருக்கும்.
இரண்டாவது பாதையாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை அமைக்கப்பட உள்ளது.
இது, சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பாதையாக இருக்கும். திருமங்கலத்தில் இருந்து பரங்கிமலை வரை உயர்த்தப்பட்ட பாதையாக இருக்கும். அதன்படி சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, செனாய் நகர், அண்ணா நகர் (கிழக்கு), அண்ணா நகர் டவர், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்கள் தரைக்கு அடியில் இருக்கும். கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர்& கே.கே.நகர், சிட்கோ (கத்திபாரா பாலம் அருகே), ஆலந்தூர், பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்கள் தரைக்கு மேல் பகுதியில் இருக்கும்.
இதில் ஆலந்தூரில் வண்ணாரப்பேட்டை& விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயிலும், சென்ட்ரல்& பரங்கிமலை செல்லும் மெட்ரோ ரயிலும் வந்து செல்லும். பரங்கிமலை ரயில் நிலையம் இரண்டு அடுக்கு ரயில் நிலையமாக உருவாக்கப்படுகிறது. தற்போதுள்ள மின்சார ரயில் நிலையம் தரை தளத்திலும், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்படும் பறக்கும் ரயில் நிலையம் முதல் மாடியிலும், சென்ட்ரல் & பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரயில் நிலையம் 2வது மாடியிலும் அமைக்கப்படும். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் செல்ல அலையத் தேவையில்லை. வசதியாக, புறநகர் பஸ் நிலையத்தின் மாடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று மெட்ரோ ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பீ14600 கோடியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுரங்கப் பாதை அமைக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட உள்ளது. 2014&2015ம் நிதியாண்டுக்குள் சென்னை நகரில் மெட்ரோ ரயில் ஓடும்.கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தோற்றம். இதன் மீதுதான் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...