Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 27, 2010

அடிப்படை கல்வி உரிமை சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதா?

புதுடில்லி :"அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் (ஆர்.டி.இ.,) முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்ற சில முஸ்லிம் அமைப்புகளின் பயம் அவற்றின் அறியாமையால் ஏற்பட்டுள்ளது' என்று, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அனைவருக்கும் அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரானது என்று ஜாமியத் உலேமா -இ- இந்த் மற்றும் அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லிஸ் -இ- முஷாவராவாத் உள்ளிட்ட சில அமைப்புகள் அச்சம் தெரிவித்திருந்தன. இந்திய அரசியல் சாசனத்தின் 29, 30ம் பிரிவுகள், மதம் மற்றும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்களின் கல்வி நிறுவனங்கள் அவர்களின் விருப்பப்படி இயங்கவும் அனுமதி அளிக்கின்றன.ஆனால், மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டம், இப்பிரிவுகளுக்கு எதிரானது என்று அந்த அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.

இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று நான் நினைக்கவில்லை. மத்திய அரசின் நோக்கமும் அதுவல்ல. இந்த பயம் அறியாமையால் ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் மூலம், மதரசாக்களின் கல்விக்கோ அல்லது 29, 30வது பிரிவுகளுக்கோ குந்தகம் வராது. இருப்பினும் இச்சட்டம் பற்றிய கவலையை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும்.இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிப,ல் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...