Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 03, 2012

அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக புதிய ஆதாரங்களை ஜோடிக்கும் கர்நாடகா பாஜக அரசு

பெங்களூர்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக்கு இடையே பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனிக்கு எதிராக புதிய ஆதாரங்களை ஆஜர்படுத்த அரசு தரப்பு முயற்சித்து வருகிறது.

ஆவணங்களின் நகல்களை எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு அளிக்காமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மஃதனியின் வழக்கறிஞர் பி.உஸ்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பு வாதம் பூர்த்தியானதை தொடர்ந்து எதிர்தரப்பின் பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் இருந்து தனது பெயரை விடுவிக்க கோரி மஃதனி அளித்த மனுவின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது அரசு தரப்பு புதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய முயன்றது. சட்டவிரோத செயல்கள் தடைச்சட்டத்தின் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் மஃதனியின் மீது வழக்கு தொடுக்கப்பட்டது என எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிநாத் அரசுகளின் அனுமதி தேவையில்லை என்றும், prima facie(ஆரம்பகட்ட)ஆதாரங்கள் இருக்கிறது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மஃதனிக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு புரிய வைக்க கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதேவேளையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் ஆவணங்களின் நகல்களை எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு அளித்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை கூட அரசு தரப்பு கடைப்பிடிக்கவில்லை என வழக்கறிஞர் பி.உஸ்மான் குற்றம் சாட்டினார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வழக்கில் புதிய ஆதாரங்களை தாக்கல் செய்வது குறித்து கேள்விப்பட்டது இல்லை என உஸ்மான் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...