டமாஸ்கஸ்:பதினொன்று மாத சிரியா அரசு எதிர்ப்பு போராட்டத்தில் மிக அதிகமாக இரத்தம் சிந்தப்பட்ட தாக்குதலில் ஹிம்ஸ் நகரத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் டாங்குகளும், மோர்ட்டார்களும் உபயோகித்து ஹிம்ஸை தாக்கிய சிரியாவின் வெறி பிடித்த ராணுவம் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை சுட்டுக் கொலைச் செய்ததாக அல் ஜஸீரா கூறுகிறது.
1300 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிரியா எதிர்ப்பு போராளி இயக்கமான ஃப்ரீ சிரியா ஆர்மி அரசு ராணுவ செக்போஸ்ட் மீது நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்க சிரியாவில் விடுதலை போராட்டம் முதலில் துவங்கிய ஹிம்ஸ் நகரத்தில் ராணுவம் கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியது. மரண எண்ணிக்கை 400ஐ தாண்டும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அருகில் உள்ள நகரமான காலிதியாவிற்கு ராணுவம் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இங்கேயுள்ள மருத்துவமனை நிறைந்து வழிந்ததால் வெளியே பந்தல்கட்டி காயமடைந்தவர்கள் கிடத்தப்பட்டுள்ளனர்.
217 சிவிலியன்கள் ஹிம்ஸிலும், 138 பேர் காலிதியாவிலும் கொல்லப்பட்டதாக பிரிட்டனில் செயல்படும் சிரிய மனித உரிமை அமைப்பு நேரடி சாட்சிகளை மேற்கோள்காட்டி கூறுகிறது. 14 ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.
சிவிலியன்களை கொலைச் செய்தது பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவம் என ஃப்ரீசிரியா ஆர்மி குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு வலுவான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் அறிவித்துள்ளனர். அதேவேளையில், ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ’ஸனா’ அறிவித்துள்ளது.
சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகுவது குறித்து அரபுலீக் தயார் செய்த பரிந்துரைகள் குறித்து ஐ.நாவில் விவாதம் நடைபெற்று வரும்வேளையில் இத்தகையதொரு தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது அரசியல் நோக்கர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...