Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 27, 2012

நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தம்!

புதுடெல்லி:வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து தொழிலாளர் அமைப்புகள் நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

இடதுசாரி தொழிலாளர் அமைப்புகளுடன், காங்கிரஸ் ஆதரவு தொழிலாளர் அமைப்புகள், பா.ஜ.கவின் கீழ் செயல்படும் தொழிலாளர் அமைப்புகள் ஆகியன இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேலை நிறுத்தம் வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசுத் துறைகளில் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என தெரிகிறது.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையால் தொழிலாளர் நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் கொள்கைகள் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளன என்று கூறி, வரும் பிப்ரவரி 28-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

காங்கிரஸ் கட்சி சார்புள்ள ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கமும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., திமுகவின் தொ.மு.ச. பேரவை, பி.எம்.எஸ். உள்பட 17 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

வங்கித்துறையில் 7 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறினார். 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெளிப்பணி ஒப்படைப்பு, கண்டேல்வால் குழுவின் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...