Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 14, 2012

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க தயார் – சவூதி மன்னர் அப்துல்லாஹ்

ரியாத்:இந்தியாவுடன் அனைத்து துறைகளிலும் நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பையும் அதிகரிக்கவும், இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெயை வழங்கவும் சவூதி அரேபியா தாயாராக இருப்பதாக அந்நாட்டின் ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.

பாதுகாப்பு துறையில் சவூதி அரேபியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக இரண்டு தினங்கள் சுற்றுப்பயணத்திற்காக சவூதி அரேபியா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மன்னர் அப்துல்லாஹ்வுடன் சந்திப்பை நடத்திய பிறகு அளித்த பேட்டியில் இத்தகவலை கூறினார்.

இந்தியாவுடன் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் அதிகரிக்க சவூதி அரேபியா விரும்புவதாக மன்னர் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் அளவை அதிகரிக்கலாம் என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியை தருவதாகவும் அப்துல்லாஹ் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை எடுத்து கூறிய மன்னரிடம், தீவிரவாதத்தை ஒழிப்பதிலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதிலும் இரு நாடுகளுக்கும் ஒரே மனோநிலைதான் என்றும், அந்த லட்சியத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியபொழுது மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என்று அந்தோணி கூறினார்.

இன்று சவூதி பாதுகாப்புத்துறை அமைச்சரும், இளவரசருமான சல்மான் பின் அப்துல் அஸீஸுடன் அந்தோணி பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...