Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 02, 2012

மமக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயிக்குப் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.

நாகூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இந்து முன்னணி தலைவரான இவரின் வீட்டுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு தபால் மூலம் பார்சல் குண்டு ஒன்று வந்தது. அதிலுள்ள குண்டுவெடித்து முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம் பரிதாபமாக பலியானார். இந்த வழக்கில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் ரிபாயி, குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், தற்போது ஜாமீனில் உள்ள ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பானது. சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...