சிதம்பரம் : சிதம்பரம் ரயில்வே மேம்பால முகப்புப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த 75 லட்சம் ரூபா# செலவில் ரவுண்டானா அமைக்க கடந்த ஆண்டு ஜனவரியில் ஆயத்தப் பணிகள் துவங்கி, ஒரு ஆண்டுக்குப் பிறகு தற்போது பணி துவங்கியது.
சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே 18 கோடி ரூபா# செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் 30 ஆண்டு கால கனவு நனவாக்கப்பட்டது. பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு பாலத்தில் விளக்கு வசதி செய்யப்பட்டது.
ஆனால் பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படாமல் இரு பகுதி நுழைவாயிலும் எதிர், எதிர் திசைகளில் வருபவர்கள் வளைவில் திரும்பும்போது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்ந்தது.
தினம் தோறும் விபத்துகள், உயிரிழப்புகள் என நடந்த நிலையில் போக்குவரத்து போலீசார் தடுப்புக் கட்டைகளை அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தி வந்தனர்.
பாலத்தின் இரு பகுதி நுழைவுவாயில் மையப் பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம் என கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அதையொட்டி 75 லட்சம் ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி ஆயத்தப் பணிகளைத் துவக்கியது. நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் குழுவும் ஆய்வு செய்தனர்.
ஆனால் என்ன காரணத்தினாலோ ரவுண்டானா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஒரு வாரமாக ரவுண்டானா அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. துவங்கிய பணியை விரைந்து முடித் தால் போக்குவரத்து சீரடையும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...