Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 22, 2013

சுயதொழில் செய்யும் இளைஞர்களுக்காக இரண்டு நாள் கருத்தரங்கு‏..

சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நடக்க உள்ளது. இளைஞர் மேம்பாட்டிற்காகவும், கிராமப்புறக் கல்விக்காகவும் பணியாற்றி வரும் ‘புதிய தலைமுறை’ அறக்கட்டளை, குறு, சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிலையத்துடன் (–MSME-Di – Micro Small and Medium Enterprises – Develop Institute ) இணைந்து இளைஞர்களுக்காக, ‘சுயதொழில் 2013’ என்கிற கருத்தரங்கம், கண்காட்சி, கையேடு ஆகியவற்றினை நடத்துகின்றது.

 வருகின்ற மார்ச் 1 மற்றும் 2ம் தேதியில் இரண்டு நாட்கள், சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைய வளாகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியினை தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறார். இளைஞர்கள் சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வழி செய்யும் வகையில், சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பட்டதாரிகள், தொழிற்கல்வி கற்போர், புதிதாக சுயதொழில் தொடங்குவோர், கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள், பகுதி நேர தொழில் செய்ய விரும்புபவர்கள் ஆகியோர், ‘சுயதொழில்-2013’ ல் பங்கேற்கலாம். தகவல் தொழில்நுட்பம், தையல் கலை, மெக்கானிக்கல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல், வேளாண்மை உற்பத்தி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெட்ரானிக்ஸ் போன்ற துறை சார்ந்த சுய தொழில் வேலை வாய்ப்புகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

 மேலும், தர மதீப்பீடு எப்படிச் செய்வது, வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், புதிய உத்திமுறைகளை பயன்படுத்துதல், தன்னார்வத் திறமையை எவ்வாறு முன்னிலைப்படுத்துவது போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற இருக்கின்றது. ‘சுயதொழில்-2013’ கண்காட்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், நுழைவுக்
கட்டணம் ஒரு நபருக்கு 50 ரூபாய். பதிவு செய்பவர்களுக்கு ஒரு கையேடும், அனைத்துக் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ள அனுமதியும் வழங்கப்படும். முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள: புதிய தலைமுறை அறக்கட்டளை 87544 17500, 87544 17338

 நன்றி – புதிய தலைமுறை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...