Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 09, 2014

சிதம்பரம் குண்டுவெடிப்பு சம்பவம் - மேலும் இருவர் கைது!

சிதம்பரம் கல்லூரி பேராசிரியர் வீட்டில் வெடித்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பட்டாபி (25), சந்தோஷ் (25) ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் அருள்பிரசாத், மாரியப்பா நகர் 2-வது தெற்கு குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.திண்டுக்கல்லில் பல வழக்குகளில் தேடப்படும் குற்ற வாளியான மோகன்ராம் என்ப வரை அந்த வீட்டில் அருள்பிரசாத் தங்கவைத்துள்ளார். அங்கு மோகன்ராம் தனது கூட்டாளி களுடன் இணைந்து, வெடி குண்டு தயாரித்துள்ளார்.இந்த வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த மோகன்ராம், புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருள்பிரசாத் தனது மனைவி ஊரில் இருக்கும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களை தவிர மற்ற நாட்களில் அவரது நண்பர்களான சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த
பிரபல ரவுடி சுரேந்திரன் (33), சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25), சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் கறிக்கடை வைத்துள்ள பட்டாபி (25), திண்டுக்கல் நாகல்நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (39) ஆகிய 4 பேரும் வீட்டிற்கு வந்து மதுஅருந்துவார்கள்.ஆனால்சனிக்கிழமை காலை வெடிகுண்டு வெடித்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என அருள்பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அண்ணாமலைநகர் திருவக்குளத்தைச் சேர்ந்த பட்டாபி (25). சீர்காழியைச் சேர்ந்த சந்தோஷ் (25) ஆகிய இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள அருள் பிரசாத்தை அண்ணாமலை பல்கலைக் கழகம் சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...