Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 22, 2014

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 38 ஆயிரத்து 462 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு நாளை (23.05.2014) காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திலுள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge1.nic.in ) காணலாம். மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

விடைத்தாள்கள் வழக்கமாக தென்மாவட்டத்தில் உள்ளவை வடமாவட்டங்களுக்கும், வடமாவட்ட விடைத்தாள்கள் தென்மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வந்தன.ஆனால் கடந்த ஆண்டு விருத்தாசலம்
அருகே விடைத்தாள்களை தேர்வு மையத்திலிருந்து எடுத்து சென்றபோது ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து சேதம் அடைந்தது. இதுபோன்ற சேதத்தை தவிர்க்க இந்த ஆண்டு அருகிலுள்ள மாவட்டங்களிலேயே விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண்கள் கோட்டூர்புரத்தில் உள்ள தகவல் மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு கணினிகளில் பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டன. தற்போது தேர்வு முடிவு தயார் நிலையில் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...