Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 10, 2014

கடலூர் மாவட்டம் பிளஸ்–2 தேர்வில் முதல் 3 இடங்களையும் மாணவிகளே கைப்பற்றினர்!

பிளஸ்–2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ– மாணவிகளில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்த்தி 1200 மதிப்பெண்களுக்கு 1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,

கடலூர் சி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எழில் ஓவியா 1187 மதிப்பெண்கள் பெற்று 2–வது இடத்தையும்,

நெய்வேலி ஜவஹர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா 1186 மதிப்பெண்கள் பெற்று 3–வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் முதலிடம் பிடித்த ஆர்த்தி, 3–வது இடம் பிடித்த அனிதா ஆகிய 2 பேரும் இரட்டை சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மாவட்டத்தில் முதல் 3 இடங்களையும் மாணவிகளே கைப்பற்றி உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.லாவண்யா 1200–க்கு 1178 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் 2–ம் இடத்தையும், சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி
மாணவி அபிநயா 1176 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3–ம் இடத்தையும் பிடித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...