Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 04, 2013

காட்டுமன்னார்கோவிலில் தானிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவிலில் பெரும்பாலானோர் விவசாயிகள். விவசாயத்திற்கே இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களை விற்பனை செய்வதற்காக கடந்த 1973ம் ஆண்டு கடலூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடம் தொடங்கப்பட்டது.

இதில் அறுவடை செய்யப்பட்ட தானிய மூட்டைகளை விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வர். மேலும் தானிய மூட்டைகளை இங்குள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்து விலை அதிகரிக்கும் காலங்களில் விற்பனை செய்வர். இதற்கென விவசாயிகளிடமிருந்து குறைந்தளவு வாடகை பெறப்படும். மேலும் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை பாதுகாப்பாக வைத்து அதில் தங்களுக்கு தேவையான தொகையை பெற்று கொள்வர். விற்பனை செய்யப்படும் காலங்களில் அரசால் கடன் அளிக்கப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தி மீதம் உள்ள தொகையை பெற்று செல்வர். இவ்வாறு விவசாயிகளின் தானியங்களை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்குகள் சேதமடைந்து உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு சுமார் ரூ. ஒரு கோடி நிதியில் புதிதாக சேமிப்பு கிடங்கு கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...