Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 02, 2013

என் குடும்ப அட்டைகளின் நிலை என்ன?

உள்தாள் இணைக்காத குடும்ப அட்டைகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பால், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்காத என் குடும்ப அட்டை தாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அரசு இது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர். என் வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தப் பொருளும் வழங் கப்படமாட்டாது. இந்த அட்டை, ஓட்டுநர் உரி மம், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்ந்த பணி களுக்கு அடையாள அட்டையாக மட்டுமே பயன்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் 98.5 சதவீதம் பேர் குடும்ப அட்டைகளை புதுப்பித்துள்ளனர்.

இன்னும் 1.5 சதவீதம் பேர் புதுப்பிக்கவில்லை. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைதாரர் களில், 2 லட்சத்து 95 ஆயிரத்து 500 பேர் உள்தாள் இணைப்பு பெறவில்லை. கடந்த 15 ஆம் தேதி வரை உள் தாள் இணைக்காத அட் டைகளை போலிகள் என அறிவித்து, நீக்கம் செய்ய வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. இந்த அரசு அறிவிபபால், என் அட்டை தாரர்கள் குழப்பமடைந் துள்ளனர். நியாய விலைக் கடைகளின் என் குடும்ப அட்டைதாரர் கள் எந்தப் பொருள் களும் வாங்குவதில்லை என்பதால், இவர்கள் உள்தாள் இணைக்க வில்லை. இதனால் இவர்களது குடும்ப அட்டைகளும் செல்லாததாகி விடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மானாமதுரையைச் சேர்ந்த முத்துமாடன் கூறுகையில், அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற எனக்கு என் வகை குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப அட்டைக்கு
பொருள்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் நியாயவிலைக் கடைக்குச் செல்வதில்லை. உள்தாள் இணைக்காத குடும்ப அட்டைகள் நீக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது எங்களுக்கும் பொருந்துமா என்று அதிகாரிகளிடம் கேட்டால் தெரியாது என் கின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது, என்றார். இந்த குழப்பத்தால் சுமார் 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் என்ன செய்வதென தெரியாமல் தவிக்கின்றனர்.

-விடுதலை 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...