ஜேர்மனியின் பான் நகரில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு நேற்று(5.12.2011) நடந்தது. அமெரிக்கா, ஜேர்மனி உட்பட நூறு நாடுகளின் ஆயிரம் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஆப்கான் எதிர்காலம் குறித்த மாநாடு நேற்று பான் நகரில் துவங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜேர்மனி வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே, சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான ஆப்கானை உருவாக்குவது தான் இம்மாநாட்டின் நோக்கம் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆப்கான் ஜனாதிபதி கர்சாய், 2014ல் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய பின் ஆப்கான் எல்லா துறைகளிலும் மேம்படுவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. நாட்டின் பாதுகாப்பைக் கையளிப்பதற்கான உறுதியாக இம்மாநாட்டை ஆப்கான் மக்கள் பார்க்கின்றனர் என்றார்.சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்) மற்றும் அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்ட பல மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை விரைவில் ஆப்கானுக்கு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மாநாட்டில் அறிவித்தார். மேலும் அவர்
ஆப்கானின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும் எனவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(3.12.2011) பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேட்டோ தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து மாநாட்டின் அடுத்த நாட்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் நேற்று லாகூரில் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, நேட்டோ தாக்குதலுக்குப் பின் சீர் குலைந்த அமெரிக்கா, பாகிஸ்தான் உறவை மீண்டும் புதுப்பிக்க நீண்ட காலம் ஆகாது என நினைக்கிறேன் என்றார்.
அமெரிக்காவும், பாகிஸ்தான் உடனான உறவை மீண்டும் புதுப்பிக்க பல்வேறு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தானும் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வருகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...