Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 05, 2011

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”-கடையநல்லூர் ரபீக்
இந்தப்படத்தின் நோக்கம்
நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.
முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

படம் தரும் படிப்பினை
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.
அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.ஆங்காங்கே குரான் வசனங்கள் சுட்டி காட்டபடுவது மிக அருமை.
இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும்
இளம் பெண்கள் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.
இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.இத்துடன் இந்த படத்தின் டிரய்லர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.


நரகத்தை நோக்கி படத்தின் டிரய்லர்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...