Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 04, 2011

தனிநபர் தங்கம் வாங்குவதில் உலகிலேயே இந்தியா முதலிடம்

   இந்தியர்களின் தங்க மோகம் உலகறிந்ததுதான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுவாரசியமான சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது MAQUARIE என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம். 04-12-2011 அன்று வெளியிட்டது

தனிநபர் தங்கம் வாங்குவதில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களிடம் உள்ள தங்கத்தின் அளவு 18 ஆயிரம் டன். இதன் மதிப்பு 48 லட்சம் கோடி ரூபாய். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சரி பாதியாகும்.உலகி்ன் மொத்த தங்க கையிருப்பில் 11 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது.

 கடந்த ஒன்றரை ஆண்டில் தங்கத்தின் விலை 64 சதவிகிதம் அதிகரித்தாலும் அதன் விற்பனை சிறிதும் குறையவில்லை என்று கூறுகிறது இந்த ஆய்வு. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் இந்திய குடும்பங்களின் சொத்து மதிப்பும் அதிகரித்து வருவதாக MAQUARIE என்ற சர்வதேச நிறுவன
அறிக்கை கூறுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...