Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 19, 2010

வெள்ள நிவாரணத்துக்கு நரேந்திர மோடி கொடுத்த நிதியை திருப்பி அனுப்பினார் நிதிஷ்குமார்

பாட்னா:பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 12 ம் தேதி நடந்தது. அன்று பீகார் பத்திரிகைகளில் வெளியான முழு பக்க விளம்பரத்தில் நரேந்திர மோடியும், நிதிஷ்குமாரும் கைகோர்த்து நிற்கும் போட்டோ வெளியாகியிருந்தது. அது கடந்த ஆண்டு லூதியானாவில் நடந்த தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

பீகாரில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது குஜராத் அளித்த நிதியுதவி பற்றியும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பீகாரில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள நிதிஷ்குமார், முஸ்லிம் ஓட்டுகளை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், மோடியுடன் சேர்ந்து அவர் கைகோர்த்து நிற்கும் படம் வெளியானது நிதிஷ்குமாரை கோபப்படுத்தியது. இதையடுத்து பா.ஜ.க தலைவர்களுக்கு அன்றைய தினம் அழைப்பு விடுத்திருந்த விருந்தை ரத்து செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், "இயற்கை சீற்றத்துக்காக செய்த உதவியை சொல்லிக் காட்டுவது அநாகரிகம். நம் கலாசாரத்துக்கு எதிரானது. பீகார் வெள்ள நிவாரணத்துக்கு, நரேந்திர மோடி அளித்த நிதி மிச்சமிருந்தால் அதை திருப்பி அனுப்புவேன்" என்றார்.

அதன்படி, குஜராத் அரசு அனுப்பிய ரூ.5 கோடி நிதியை, பீகார் அரசு இன்று திருப்பி அனுப்பியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...