Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 23, 2010

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிற நாடுகளின் பொருளாதார மீட்சியை பாதிக்கும்- பிரணாப் முகர்ஜி

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சியைக் கடுமையாக பாதிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


இந்திய, அமெரிக்க தொழிலதிபர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் வந்திருந்த அவர் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கருத்தரங்கில் பேசும்போது; 'ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதிக்கும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து தற்போது பெரும்பாலான நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.


இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகள் உலக வங்கி உதவியுடன் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.


அதேசமயம் இதேபோன்ற நெருக்கடி அயர்லாந்து மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளிலும் ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.


இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் ரூபாயின் மாற்று மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை உள்ளிட்டவை ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் தாக்கத்தால் உருவானவை.


ஐரோப்பிய நாடுகளின் வங்கி நிதி நிலையை அறிக்கையாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் உண்மை நிலையை அறிய முடியும். இது தொடர்பாக இம்மாதம் 26 மற்றும் 27-ம் தேதி டொரண்டோவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது' என்றார் பிரணாப்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...