Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 01, 2010

இஸ்ரேலின் கொடூரத்தில் உலகம் நடுங்கியது

காஸ்ஸா:இஸ்ரேல் என்ற அக்கிரமக்கார தேசம் விதித்த தடையால் பட்டினி உச்சத்தில் இருக்கும் ஃபலஸ்தீனர்களுக்கு உதவி புரிவதற்காக வந்த நிவாரண கப்பலின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகத்தை நடுங்கச் செய்துள்ளது.இந்த அக்கிரமத்தை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்த உலக நாடுகள் இஸ்ரேலின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளன. இத்தாக்குதலை ஐ.நா மனித உரிமை கவுன்சில் கண்டித்துள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும், இதனைக் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் தலைவர் நவி தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கெதிராக விசாரணை நடத்தவேண்டும் என்றும், காஸ்ஸாவின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனே விலக்க வேண்டும் என்றும் ஐரோப்பியன் யூனியன் கோரியுள்ளது.

இஸ்ரேலின் கொடூரங்களுக்கெதிராக கண்களை திறக்கவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் வரம்பு மீறிய நடவடிக்கை என அரப் லீக் கூறியுள்ளது.இஸ்ரேலுக்கெதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 22 உறுப்பினர்களின் கமிட்டி உடனடியாக கூடும் என அரப் லீக்கின் தலைவர் அம்ர் மூஸா தெரிவித்தார்.

இஸ்ரேலின் செயலை கூட்டுப்படுகொலை என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வர்ணித்துள்ளார். மரணித்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 3 நாட்கள் துக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மனிதத்தன்மையற்ற தாக்குதல் மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை தங்களுடைய கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது என இச்சம்பவத்தை கண்டித்த ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.இச்சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்த கிரீஸ் இஸ்ரேலுடனான ஒருங்கிணைந்த கப்பற்படை பயிற்சியை ரத்துச் செய்தது. கிரீஸ் நாட்டைச் சார்ந்த 30 பேர் தாக்குதல் நடந்த கப்பலில் இருந்தனர்.எம்.பி உட்பட 16 குடிமக்கள் கப்பலிருந்தனர் எனக்கூறிய குவைத் இஸ்ரேலின் நடவடிக்கையை கொடூரமானது என வர்ணித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையை நியாயப்படுத்தமுடியாது என பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் பர்ணாடு குஷ்னரும், ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாட்டர் வெலும் கூறினர்.இஸ்ரேலுக்கெதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஹிஸ்புல்லாஹ்வின் உதவியை நாடப்போவதாக லெபனானின் மனித உரிமை பணியாளர் மஹீன் பஷர் தெரிவித்தார். இஸ்ரேலை எவ்வாறு எதிர்க்கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு தெரியுமென்றும் சூழலுக்கு தகுந்தவாறு அவர்கள் பதிலடிக் கொடுப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமாதான பணியை மேற்கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. இஸ்ரேலின் கொடூரத்திற்கெதிராக உலகம் முழுவதும் கண்டன பேரணிகள் நடைபெற்றன.லண்டனில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். துருக்கியில் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. இஸ்தான்புல்லில் தூதரகத்தின் மீது தாக்குதல் நடந்தது.50 நாடுகளிலிருந்து எம்.பிக்கள் உள்ளிட்ட 700 பேர் நிவாரண கப்பல்களில் இருந்தனர். ஃப்ரீடம் ஃப்ளோடில்லா என்று அழைக்கப்பட நிவாரண கப்பலில் 581 பேரில் 400 பேரும் துருக்கியை சார்ந்தவர்களாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...