Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 26, 2015

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

டில்லி: ஜூன் 26 மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர்களை விரைவில் விடுவிக்கும் வகையில் வழக்காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன்,ஆங்கிலப் பத்ரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும்
தொடர்பு உள்ளதாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறியிருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்திரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது. மோடி அரசு வந்த உடனேயே தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித்தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி, உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார். பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக்கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக்கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.

இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியிருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்குகளை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித்தால்தான் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில் -_ இந்த வழக்கில் அல்ல -_ ஈடுபட முடியும் என்று கூறினேன். அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேசவில்லை என்றார் அவர். ரோஹினி செலியனுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டுவிட்டன.

அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது. மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமானியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகையில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால் அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...