Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 03, 2015

கூகுள் நெருடல்: 'டாப் 10 கிரிமினல்கள்' படத் தேடலில் மோடி

கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை. அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல... முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த கூகுள் தேடல் முடிவுகளையொட்டி, பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் சிலர் பதிவுகள் இடத் தொடங்கினர். இதன் விளைவாக, #Top10Criminals என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. கூகுளில் டாப் 10 கிரிமினல்கள் என்ற தேடலுக்கான முடிவில் மோடியின் முதன்மை வகிப்பது விவாதப் பொருள் ஆனது.


ட்விட்டரில் #Top10Criminals ஹேஷ்டேகில் கொட்டப்பட்ட பதிவுகளில் சில:

 Sanjay Jha @JhaSanjay - இந்த அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. இப்படி வருவது சரியானது தான்.

Roji M John@rojimjohn - குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை இடத்தில் நமது நாட்டின் பிரதமர் உள்ளார். பிரதமரும் கூகுளும் தங்களை இனியாவது திருத்திக் கொள்ளட்டும்.

 Sir Chetan Bhagat @chetan_bhaqat - ரூ.780 கோடி விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. ஒருவேளை இதுவும் கூகுள் விளம்பர
உத்தியாக இருக்கலாம்.

Parikshit Shah @imparixit - நரேந்திர மோடியின் பின்னணி நம் அனைவருக்குமே தெரியும். அவரை நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்தான் நமது பிரதமர். அவரை விட்டுக் கொடுக்க முடியாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...