Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 21, 2013

கொள்ளுமேடு ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள்!

நமது கொள்ளுமேடு ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விபரங்களை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.டி.சிராஜுதீன் வெளியிட்டுள்ளார்.அதன் விபரங்கள் வருமாறு…

இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2012-2013 ஆண்டில் இது வரை பத்து வீடுகள் கட்டித் தரப் பட்டுள்ளன.

100 நாள் வேலை திட்டத்தில் நமது ஊரை சேர்ந்த ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தண்ணீர் விநியோகம் தடை பட்டிருக்கும் சமயங்களில் பொதுமக்களின் வசதிக்காக தெற்குத் தெரு,மேலத் தெரு,சலாமத் புதுத் தெரு,கூபாத் தெரு ஆகிய இடங்களில் அடி பைப் வசதி செய்யப்பட்டுள்ளது.

மாதத்திற்கு நான்கு தடவைகள் (வாரம் ஒரு தடவை) கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காட்டுமன்னார்குடி ஒன்றியத்திலேயே சொந்தமாக கொசு மருந்து அடிக்கும் மெஷின் வைத்திருக்கும் ஒரே ஊராட்சி கொள்ளுமேடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

water-manual-pipehousing-project-002100-day-work-project-002100-day-work-project-001


-செய்தி&படங்கள்: எம்.டி.ஜியாவுத்தீன்&kollumedu.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...