Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 16, 2013

கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் 2015 ஆண்டிற்கு பிறகு செல்லாது!

இது தொடர்பாக கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச விமான போக்குவரத்து ஆணைய உத்தரவின்படி உலகம் முழுவதும் வினியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு 24.11.2015-ந் தேதியோடு கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 25-ந் தேதி முதல் கம்ப்யூட்டரால் பதிவு(நான் மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) செய்ய இயலாத அதாவது கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளுக்கு உலக நாடுகள் விசாக்கள் வழங்க மறுத்து விடும். புதிய கையால் எழுதப்பட்டு போட்டோ ஒட்டிய பாஸ்போர்ட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வினியோகிக்கப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய முடியாத பாஸ்போர்ட்டுகளாக கருதப்படுகின்றன.இந்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் பதிவு செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வினியோகித்து
வருகிறது. எனவே கோவை மண்டலத்தில் கையால் எழுதப்பட்டு 24.11.2015-ந் தேதிக்கு பின்னர் காலாவதியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கம்ப்யூட்டரால் பதிவு செய்யப்படும் பாஸ்போர்ட்டுக்கு (மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதன் மூலம் விசா மறுக்கப்படுவது மற்றும் குடியுரிமை பிரச்சினைகளை தவிர்க்கலாம் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...