Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 31, 2013

காட்டுமன்னார்கோவிலில் இருந்து சென்னைக்கு ஒரு புதிய பஸ்!-தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு 26 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து அதிகாரிகள், அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் 333 புதிய பஸ்கள் மற்றும் 81 புனரமைக்கப்பட்ட பஸ்கள் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 26 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி ஏற்கனவே இருந்த வழித்தடங்கள் மூலம் கடலூரில் இருந்து விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், திருச்சிக்கு 9 பஸ்களும், கடலூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 2 புதிய பஸ்களும், கடலூரில் இருந்து திண்டிவனம் வழியாக 2 விரைவு பஸ்கள் சென்னைக்கும் இயக்கப்பட்டன.

அதேபோல் காட்டுமன்னார்கோவிலில் இருந்து சிதம்பரம், பண்ருட்டி, திண்டிவனம் வழியாக சென்னைக்கு ஒரு புதிய பஸ்சும்,

காட்டுமன்னார்கோவிலில் இருந்து ஸ்ரீமுஷ்ணத்துக்கு ஒரு புதிய பஸ்

சிதம்பரத்தில் இருந்து கடலூர், புதுச்சேரி வழியாக 4 புதிய பஸ்களும்,

சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்துக்கு 2 புதிய பஸ்களும், விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு 2 புதிய பஸ்களும்,

வடலூரில் இருந்து பண்ருட்டி, கோலியனூர், திண்டிவனம் வழியாக சென்னைக்கு
3 புதிய பஸ்களும்,  உள்பட மொத்தம் 26 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன.

புதிய பஸ்கள் இயக்கப்பட்டதையொட்டி கடலூர் பஸ் நிலையத்தில் கடலூர் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன் தலைமையில் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், அரசு போக்குவரத்து பணிமனை மண்டல பொது மேலாளர் கருணாநிதி முன்னிலையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் கோட்ட மேலாளர்(வணிகம்) குணசேகரன், கிளை மேலாளர்கள் ராஜேந்திரன், பன்னீர்செல்வம், பேருந்து நிலைய மேலாளர் மணிவண்ணன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தமிழ்ச்செல்வன், ஓட்டுனர் அணி ராஜா உள்பட கவுன்சிலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...