Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 13, 2013

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு மீண்டும் குடிநீர்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 13- வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியாக உயர்ந்துள்ள தால் சென்னைக்கு ஒரு மாதத்துக்கு பின் மீண் டும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

 காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி சோழர்காலத்தில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் உரு வாக்கப்பட்டது. லால் பேட்டையில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை 16 கிலோ மீட்டர் நீளம் ஏரிக்கரை உள்ளது. இதன் மூலம் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு மூலமாகவும், மழை காலங்களில் பொன்னேரியில் இருந்து கருவாட்டு ஓடை மற்றும் செங்கால் ஓடை வழியாக மழைநீர் வந்தடை கிறது. வீராணம் ஏரியின் முழுநீர் மட்டம் 47.50 அடியாகும். இதன் கொள் ளளவு 1465 மில்லியன் கன அடியாகும். வீராணம் ஏரியின் நீர் மட்டத்தை 45.50 அடி யில் இருந்து 47.50 அடி யாக உயர்த்தி, அதன் கொள்ளளவை 515 மில்லியன் கனஅடியாக உயர்த்தி சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சென்னை பெருநகர் குடிநீர் திட்டத்திற்கு வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு மூலமாக கடந்த 26.9.2004 முதல் நாள்தோறும் 77 மில்லி யன் கனஅடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏரியில் வண்டல் மண் படிந்துள்ளதால் சென்னை குடிநீர் திட்டத்திற்கு 8 மாதங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு பருவ மழையின்போது, வீராணம் ஏரி முழு கொள்ள ளவை எட்டியது. எனவே வீராணம் ஏரியில் இருந்து சென் னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் பருவமழை தொடர்ந்து பெய்யாததால், வீராணத்தில் இருந்து விவசாயம் செய்ய கூடுத லாக தண்ணீர் தேவைப்பட்டது. எனவே வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்து, கடந்த மாதம்(பிப்ரவரி) 9ஆம் தேதி ஏரியின் நீர் மட்டம் 39.50 அடியாக இருந்தது. எனவே ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வது கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டது.

 இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீரா ணம் ஏரிக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர்
வந்தது. பின்னர் படிப் படியாக நீரின் வரத்து குறைந்து தற்போது நொடிக்கு 820 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வரு கிறது. இதன் காரணமாக 39.50 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக 41.10 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து நேற்று முதல் ஏரியில் இருந்து சென் னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...