ரஷ்யா- ஆப்கானிஸ்தான் (1979) இடையே நடந்த போரின் போது காணாமல் போன இராணுவ வீரர் ஒருவர் தற்போது கண்டறியப்பட்டுள்ளார். தென் ஆப்கானிஸ்தானில் ஹெராட் என்ற பகுதியில் இவர் மூலிகை வைத்தியராக பணியாற்றுவதுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரஷ்ய படை ஆப்கான் மீது தொடுத்த போரின் போது அந்நாட்டின் சிகப்பு படையில் பணியாற்றியுள்ளார்.
இவரது இயற்பெயர் பகிரிடின் ககி மோவ், போரின் போது 2 மாதங்களிலிலேயே யுத்தத்தில் காயமடைந்த இவரை ஆப்கான் மக்கள் காப்பாற்றி பாதுகாத்து வந்துள்ளனர். பின்னர் ஆப்கானிலேயே திருமணம் முடித்துக்கொண்டு இஸ்லாமியராக மாறி தன் பெயரை சேக் அப்துல்லா என மாற்றிக்கொண்டார்.
தற்போது காணாமல் போன 264 சிகப்பு படை வீரர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்ட போது, இவரை கண்டுபிடித்துள்ளனர். சேக் அப்துல்லாவும் தான் பணியாற்றிய குழு குறித்தும் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பற்றியும் தெரிவித்துள்ளார். 1979ல் ஆப்கானுடனான போரில் 15,000 சோவியத் வீரர்கள் கொல்ல
ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-asiananban

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...