தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரி சம்சுல்ஹுதா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றி பெண்களுக்கான தொழுகை பயிற்சியையும் அளித்தார்.மேலும் சகோதரி ஆயிசா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்.மதிய உணவு இடைவேளையின் பொது சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்.காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4 மணி வரை பெரும் நெகிழ்ச்சியோடு நடைபெற்றது.மதிய உணவு நமது கிளையின் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.
சகோதரர் தல்ஹா அவர்களின் வீட்டில் பெண்களும் தவ்ஹீத் மர்க்கஸில் ஆண்களும் நிரம்பி இருந்ததனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் 150பெண்கள் கலந்துகொண்டனர்.மானியம் ஆடூர்,லால்பேட்டை,ஆயங்குடி மற்றும் T.நெடுஞ்ச்சேரி போன்ற ஊர்களில் இருந்தது பெண்கள் பெரும் அளவில் கலந்த்துக்கொண்டனர்.நெடுஞ்சேரில் இருந்து சுமார் 12 பெண்கள் கலந்துக்கொண்டது தவ்ஹீதின் எழுச்சி எந்த அளவிற்கு பெண்களின் உள்ளங்களில் சென்றடைந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்தது.எல்லா புகழும் கண்ணியம் பொருந்திய அல்லாஹ் ஒருவனுக்கே..
செய்தி:மு.இ.அன்வர்தீன்
படம்: த.முஹம்மது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...