Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2012

உலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் !

உலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் பட்டியலில், தலைநகர் டில்லி, எட்டாவது இடம் பிடித்துள்ளது. நகரங்கள் குறித்த கருத்துக்கணிப்பை, "சி.என்.என்.ஜி.ஓ.,' என்ற, இணையதளம் நடத்தியது. கணிப்பின் முடிவுகளை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

உலக மக்களால் வெறுக்கப்படும் நகரங்கள் பட்டியலில், மெக்சிகோவின், டிஜுவானா நகரம், முதலிடம் பிடித்துள்ளது. இந்நகருக்கு வரும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், 90 சதவீதம் குறைந்து உள்ளது. இரண்டாமிடம், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கும், மூன்றாமிடம், பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கும் கிடைத்துள்ளன. மாலியில் உள்ள, டிம்புக்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள், நான்காம், ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில், தலைநகர் டில்லிக்கு, எட்டாமிடம் கிடைத்துள்ளது. "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டால் போதும்; அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதற்காகவே, ஏராளமான நபர்கள், டில்லியில் நடமாடுகின்றனர்' என்பதே, மக்கள் வெறுப்பிற்கு காரணம்.

பெரு நாட்டின், லிமா, இந்தோனேசிய தலைநகர், ஜகார்த்தா,
எகிப்து தலைநகர், கெய்ரோ ஆகியவை, ஆறு, ஏழு மற்றும், ஒன்பதாம் இடங்களைப் பிடித்துள்ளன. 10ம் இடத்தில், பெலிஸ் நாட்டின், பெலிஸ் நகர் உள்ளது. இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற நகரங்களான, பாரிஸ், சிட்னி, மெல்போர்ன் போன்றவையும், சுற்றுலாப் பயணிகளுக்கு பிடிக்காமல் போனது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...