Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 08, 2011

முட்டம் பாலம் கட்டும் பணி...தீவிரம் : அடுத்த ஆண்டில் முடிக்க திட்டம்

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் 48 கோடி ரூபாயில் கட்டப்படும் முட்டம் பாலம் பணி இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் பகுதியில் கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 48 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இரு மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், வியாபார ரீதியாக இரு மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் இப்பாலம் கட்டப்படுகிறது.


பாலம் பணி முடிவடைந்தால் நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு பிரதான சாலையாகிவிடும். சென்னையில் இருந்து நாகை மாவட்டத்திற்குச் செல்பவர்கள் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், முட்டம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், நீடூர், மயிலாடுதுறை சென்று விடலாம். அதேப்போன்று காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள கிராம மக்கள் மயிலாடுதுறை செல்வதற்கு சிதம்பரம் வந்து சீர்காழி வழியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நாகை கொள்ளிடக்கரை கிராம மக்களும் 70 கி.மீ., தூரம் சுற்றி வரவேண்டிய நிலை தவிர்க்கப்படும். இதனால் 2.30 மணி நேரம் செல்ல வேண்டியது ஒரு மணி நேரம் மிச்சமாகி விடும். முட்டம் பாலம் கட்ட வேண்டும் என 1974ம் ஆண்டு அப்போதைய காட்டுமன்னார்கோவில் சேர்மனும், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தந்தையுமான கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சியால் பாலம் கொண்டு வரப்பட்டது. நபார்டு உதவியுடன் தமிழக அரசு 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி துவக்கியுள்ளது. நிலம் ஆர்ஜித பணிகள் முடிந்து கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி பணி துவங்கியது. துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் கட்ட ஒன்றரை ஆண்டுகள் திட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டு, அது 12 மாதமாக குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெய்த மழை, கொள்ளிடத்தில் வெள்ளம் என இயற்கை இடர்பாடுகளால் பாலம் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது. 5 மாதங்கள் பணிகள் நடைபெறாமல் போனதால் பணிகள் முடித்திருக்க வேண்டிய நிலையில் 50 சதவீத பணிகள்தான் முடிந்துள்ளது.

பாலத்திற்கு 36 பில்லர்கள் அமைக்கும் பணி முடிவடைந்து அதன்மேல் தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பணிகள் முடிய மேலும் அவகாசம் தேவை என்பதால் வரும் 2012 ஜூலை மாதம் பணி முழுமை பெற்று விடும் என தெரிகிறது. அதையொட்டி பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...