Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 08, 2011

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர் வெறியாட்டம்: 120 பலஸ்தீனர் படுகாயம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் கலந்தியா அகதி முகாம் அருகில் இடம்பெற்ற அமைதிப் பேரணியைக் கலைக்குமுகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புதிய வகையான வாயுப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் விளைவாகப் பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் பொதுமக்களில் அனேகர் மயக்கமடைந்ததோடு, மற்றும் பலருக்கு கண்களில் ஒருவித எரிச்சல் ஏற்பட்டுப் பெரிதும் சிரமப்பட்டனர்.

அமைதியான முறையில் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணியில் அடாவடித்தனமாகக் குறுக்கிட்டுத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் எதேச்சதிகாரம் பொதுமக்களுக்கு ஆத்திரமூட்டுவதாக அமைந்திருந்தது.

பலஸ்தீன் பேரணியாளரைத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், அதன் பின் அங்கிருந்த அகதி முகாமுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்டதையடுத்து, பொதுமக்கள் கற்கள் மற்றும் வெற்றுப் போத்தல்களால் எதிர்த்தாக்குதல் நடாத்தியதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சாத்வீகமான எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீன் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதோடு, கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். அத்தோடு, பொதுமக்கள் மீது பம்புகள் மூலம் கழிவுநீர் மற்றும் இரசாயனம் கலந்த நீரைப் பாய்ச்சினர். இவர்களின் இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளால் சிறுவர்கள் உட்பட சுமார் 120 பலஸ்தீன் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அகதி முகாமில் உள்ளோரால் தற்காலிக முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

1967 ஆம் ஆண்டு மேற்குக் கரை, காஸா உள்ளிட்டு கிழக்கு ஜெரூசலப் பிரதேசம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒரு துக்கதினமாக நினைவுகூர்ந்து பலஸ்தீன் முழுதும் பல்வேறு அமைதிப் பேரணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியா-கோலான் குன்றுப் பிரதேசத்தில் இடம்பெற்ற அத்தகைய பேரணிமீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் 23 பேரணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர் என சிரியாவின் உத்தியோகபூர்வ செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது.

அவ்வாறே, பலஸ்தீனின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற 'யவ்முன் நக்ஸா' நினைவுப் பேரணிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கடும் தாக்குதல்களை மேற்கொண்டு, ஏராளமான பலஸ்தீனர்களைக் கைதுசெய்து வதைமுகாம்களில் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.
source:inneram

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...