Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 11, 2010

வீராணம் நீர்மட்டம் கோடையில் 'கிடுகிடு'


சிதம்பரம் :

சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் விவசாயிகளின் உயிர் நாடியாக வீராணம் ஏரி உள்ளது. 2005ம் ஆண்டு முதல் சென்னை மக்களின் தாகத்தை தணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதால், கோடை காலத்திலும் வீராணத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஒரு வாரம், கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் நிரப்பப்பட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 900 மில்லியன் கன அடி வரை தண்ணீர் நிரப்பப்பட்டது. வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருவதால், படிப்படியாக நீர்மட்டம் குறைந்தது. அதனால், கடந்த நான்கு நாட்களாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக கோடையிலும் இரண்டாவது முறையாக வீராணத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், வெகுவாகக் குறைந்திருந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிலவரப்படி 750 மில்லியன் கன அடியைத் தொட்டது.


ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு
சிதம்பரம் :

வீராணம் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. லால்பேட்டை அரியா மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு லால் பேட்டை, கொள்ளிமலை, எள்ளேரி, எள்ளேரி கிழக்கு, நெய்வாசல் துறக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 756 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. வீராணத்தில் இருந்து லால்பேட்டை வழியாக செல்லும் 4 கி.மீ., நீளமுள்ள பாசன வாய்க்கால் முறையான பராமரிப் பின்றி ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது.

தற்போதைய நிலையில் மூன்றில் ஒரு பகுதியாக வாய்க்கால் குறுகிவிட்டதுடன், ஒவ்வொரு வீட்டின் கழிவுநீரும் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது. பாசன வாய்க் காலை ஆக்கிரமித்து வீடுகள், செப் டிக் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதனால் பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்து அதிக அளவில் பாசனம் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள ஆக்கிரமிப்பாளர்கள் 45 பேருக்கு முறைப் படி கடந்த ஜன. 13ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன்வராத நிலையில் சிதம்பரம் கோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் கலியமூர்த்தி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. உதவி பொறியாளர் சரவணன், டி.எஸ்.பி., ராமச்சந் திரன், தாசில்தார் வீரபாண் டியன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் மூலம் ஆக்கிரமிப்புகள் அளக்கப் பட்டது. அதனை தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மேலும் அவகாசம் வேண்டும். பொக்லைன் மூலம் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என கூறி தடுத்தனர். வாக்குவாதம் ஏற் பட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப்பின் மேலும் ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கண்டிப் புடன் கூறினர். இச்சம்பவத்தால் லால் பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...